கிரகநிலை
பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு - ராசியில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராகு அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்
27-06-2026 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்
எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசிர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
உங்கள் காரியங்களை பெரிய அலைச்சல் இல்லாமல் சிறிது தாமதத்துடன் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சில அனாவசிய செலவுகளை செய்ய நேரிடும். மற்றபடி உற்றார், உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நெடுநாட்களாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும். திடமாக சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். கடினமாக உழைத்து போட்டிகளையும், எதிர்ப்பாளர்களையும் தகர்த்தெறிவீர்கள்.
செய்தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தைத் தள்ளி வைக்கவும். அனாவசிய கடன் வாங்கி புதிய முயற்சிகள் எதையும் செயல்படுத்த வேண்டாம். நிம்மதியாக உறங்குவீர்கள். ஆனாலும் எவருக்கும் வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது. உங்கள் பெயரில் எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தாய் வழியிலிருந்து நன்மைகள் கிடைக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய வீட்டிற்கு மாற நினைப்பவர்கள் இந்த ஆண்டு அதை செயல்படுத்தலாம்.
வெளியில் கொடுத்திருந்த கடன் உடனடியாகத் திரும்பக் கிடைக்கும். அசையாச் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் தீரும். மனம் தெளிவுடன் காணப்படும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடித் தருவார். முன்பின் அறியாதவர்களும் உதவி செய்வார்கள். களவு போனதாக நினைத்துக்கொண்டிருந்த பொருட்கள் திடீரென்று உங்கள் கைக்கு கிடைக்கும். எவரிடமும் முன் கோபம் கொண்டு அவசியமில்லாத வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்.
உத்யோகஸ்தர்கள்
அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடிப்பீர்கள். சில நேரங்களில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். மற்றபடி பண வரவுக்குத் தடைகள் வராது. மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருப்பதால் கவனமாக நடந்துகொள்ளவும்.
வியாபாரிகள்
பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே முடிவடையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகளால் உங்களின் வேலைப் பளுக் குறையும்.
விவசாயிகள்
விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசம் போகாது. நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி எதிர்கால வளத்திற்கு வித்திடுவீர்கள்.
அரசியல்வாதிகள்
பொதுச் சேவையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடத்தின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
கலைத்துறையினர்
பெயரும், புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றி கடினமான வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிடுவீர்கள்.
பெண்மணிகள்
அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மாணவமணிகள்
மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடினமாக உழைக்க நேரிடும். இருப்பினும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவினால் படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
மகம்
கட்டடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும்.
பூரம்
குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள்.
உத்திரம் - 1
புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீ சூரியனார் கோயில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசனம் செய்வதும் நன்மையைத் தரும்.
சொல்ல வேண்டிய மந்திரம்
தினசரி ஆதித்யஹ்ருத்யம் அல்லது புருஷஸூக்தம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்
“எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு துவாதசி தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்
வளர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன்
தேய்பிறை: புதன், வியாழன்
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - மீனம்
ஏப்ரல் மாதப் பலன்கள் - மேஷம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

