திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்தந மாதம்..

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 am

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் கேது - ரண ருன ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   - களத்திர ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.02.2026 அன்று சூரியன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21.02.2026 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு களை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர் கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

மகம்:

இந்த மாதம் வீண் மனக்கவலையை  உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

பூரம்:

இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:   பிப்ர 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்:  பிப்ர 26, 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.