கிரகநிலை
ராசியில் சந்திரன், ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்
27-06-2026 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்
கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள்.
பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய செலவுகளுக்கு சிரமப்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் மீண்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால் அனைத்து விஷயங்களிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார்கள். குடும்பத்தில் சிறு சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படும். மற்றபடி உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. என்றாலும் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை உடனடியாக கவனிக்கவும். சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும்.
செய்தொழிலில் இருந்த இடையூறுகளும் தடங்கல்களும் நீங்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும். இதனால் சில பாராட்டுகளையும் விருதுகளையும் பெறுவீர்கள். கூட்டாளிகளுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதிலிருந்த பயம் நீங்கும்.
எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டும் திட்டங்கள் வெற்றி பெறும். உங்களைத் தனிமைப்படுத்திய உறவினர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். ஆனாலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. சிலருக்கு திடீரென்று நெடுந்தூரப் பயணங்களைச் செய்ய நேரிடும்.
எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் மனத்தாங்கல்களை ஆத் ம நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். மற்றபடி எவருக்கும் இந்த ஆண்டு வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது.
உத்யோகஸ்தர்கள்
கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று தாமதமாகவே பரிசீலிப்பார்கள். இதனால் கோபமடையாமல் பொறுமை காக்கவும். முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும். மற்றபடி உங்கள் திட்டங்களை நன்றாக முடிப்பதில் கவனமாக இருப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்களில் உடனடியாக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.
வியாபாரிகள்
கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடிந்தாலும் பெரிய லாபம் என்று எதுவும் ஏற்படாது. அதனால் கூட்டாளிகளுடன் சேராமல் உங்கள் காரியங்களை தனித்துச் செய்யவும். புதியவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். அரசு வழிகளில் கெடுபிடிகள் ஏற்படலாம்.
விவசாயிகள்
திறமைகள் வீண் போகாது. விளைச்சலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். மற்றபடி சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்களால் பெரிய தொல்லைகள் ஏற்படாது. இந்தக் காலகட்டத்தில் உபரி வருமானத்தில் கவனம் செலுத்துங்கள்.
அரசியல்வாதிகள்
கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. மற்றவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டாம். மற்றபடி உங்களின் கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள்.
கலைத்துறையினர்
தேவையான வருமானத்தைக் காண்பீர்கள். வெளியூரில் நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெறுவீர்கள். உங்களின் செயல்களில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். சிறிய தடைகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்மணிகள்
கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உங்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்படுவீர்கள். குடும்ப வருமானத்தைப் பெருக்க சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள்.
மாணவமணிகள்
நன்கு உழைத்துப் படித்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். உங்களின் உடல்நலம் சீராகவே இருக்கும். வெளிவிளையாட்டுகளிலும் உடற்பயிற்சியிலும் தவறாமல் ஈடுபடவும்.
அவிட்டம் - 3, 4
உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும்.
சதயம் நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
பூரட்டாதி - 1, 2, 3
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும்.
பரிகாரம்
சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்
தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்
சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்
வளர்பிறை: வியாழன், வெள்ளி
தேய்பிறை: வியாழன், வெள்ளி
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - துலாம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - கன்னி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

