ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வாக்காளர்கள், அரசியல்வாதிகளுக்கு நன்றி: தலைமை தேர்தல் ஆணையர்

ஐந்து மாநில தேர்தல்களை அமைதியாக நடத்துவதற்கு உதவிய வாக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 மே 2016, 2:20 am

புது தில்லி: ஐந்து மாநில தேர்தல்களை அமைதியாக நடத்துவதற்கு உதவிய வாக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான பொதுத் தேர்தல் அண்மையில் நிறைவடைந்தது.

இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.  இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நஜீம் ஜைதி, ஐந்து மாநில தேர்தல்கள் அனைத்தும் பொதுவாக அமைதியாக நடைபெற்றது. இதற்காக வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக தேர்தல் களத்தில் அதிக அளவில் கருப்புப் பணம் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் வந்தன. தேர்தல் ஆணையம் கணக்கில் வராத சுமார் ரூ. 110 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தது.

நாங்கள் எங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளோம். சிலர் எங்களை விமரிசித்துள்ளனர். அது அவர்களது பார்வையிலானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.