தேர்தல் வரலாறு - 4: பிரிட்டிஷ் ஆட்சியில் தேர்தல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள்
மீரட் நகரில் 1857, மே 10-ந் தேதி கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக இந்தியச் சிப்பாய்கள் செய்த கிளர்ச்சியைத்தான் வரலாற்று ஆசிரியர்கள் முதல் சிப்பாய்க் கலகம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில், அதற்கு 51 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததுதான் முதல் புரட்சி.




















