டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்

பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களை வெற்றி பெற செய்வ வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:57 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களை வெற்றி பெற செய்வ வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், துறைமங்கலம் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக  அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போடியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கு செயல்பட வேண்டும்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று தேர்தல் நிதி வழங்கிய மாநில, மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில நிர்வாகி பா. துரைசாமி, மாவட்ட துணைச் செயலர்கள் மா. ராஜ்குமார், ஜெகதீசன், நூருல்ஹூதா இஸ்மாயில், மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை,  மதியழகன், நல்லதம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் வரவேற்றார். நகரச் செயலர் எம். பிரபாகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.