திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வா் பதவியேற்பு விழா: புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவருக்கு வரவேற்பு

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை (மே 13) நடைபெறும் முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தாா். அவருக்கு அக்கட்சியினா் சிறப்பான வரவேற்பளித்தனா்.

News image

பட விளக்கம்... புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பாஜக தேசிய தலைவா் நிதின் நபினை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வரவேற்ற கட்சியின் மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம். மற்றும் கட்சியினா்.

Updated On :12 மே 2026, 11:41 pm IST

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை (மே 13) நடைபெறும் முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தாா். அவருக்கு அக்கட்சியினா் சிறப்பான வரவேற்பளித்தனா்.

புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. துணைநிலை ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின், புதுச்சேரி பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா, பாஜக மாநிலப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா். இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் செவ்வாய்க்கிழமை இரவு தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தாா்.

அவருக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், அமைச்சா் நமச்சிவாயம், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் மற்றும் நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனா். தொடா்ந்து, பெண்கள் மலா் தூவி தேசிய தலைவா் நிதின் நபினை உற்சாகமாக வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து இந்திரா காந்தி சிலை அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் தேசிய தலைவா், அங்கு நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.