ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக 'புதிய முஸ்லிம் லீக்' கட்சியாக மாறிவிட்டது: நிதின் நபின் விமர்சனம்

காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக 'புதிய முஸ்லிம் லீக்' கட்சியாக மாறிவிட்டது என நிதின் நபின் விமர்சனம் குறித்து...

Nitin Nabin

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் - கோப்புப்படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:54 pm IST

புதுதில்லி: வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் முடிவை வியாழக்கிழமை கடுமையாகச் சாடிய பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக 'புதிய முஸ்லிம் லீக்' கட்சியாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர நாளில் தில்லியில் உள்ள காங்கிரல் கட்சி அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடியதால் அதனை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தடுத்ததாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் இரண்டு பத்திகளை மட்டுமே பாடப்படும் என்று கோவாவில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. 1937-ல் அந்த கட்சியின் உயர்மட்டக் குழு எடுத்த முடிவையே பின்பற்றுவதாகவும் காங்கிரஸ் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக 'புதிய முஸ்லிம் லீக்' கட்சியாக மாறியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

காங்கிரஸ் மேடைகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடப்படும் என்று அக்கட்சியின் செயற்குழு முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் போது நடந்த வந்தே மாதரத்தை அவமதிக்கும் செயலை, காங்கிரஸ் இப்போது தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகவே மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல் "பாரத மாதா'வை போற்றும் புனிதமான பாடலை அவமதிப்பது, இதே பாடலைத் தங்கள் சிந்தனையில் கொண்டு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான தியாகிகளை அவமதிப்பதாகும்."

மேலும், காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக இன்று 'புதிய முஸ்லிம் லீக்' கட்சியாக மாறியுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்ச்சியின்போது வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையை மறைமுகமாகக் குறிப்பிட்ட நபின், தேசியப் பாடலுக்கு இழைக்கப்பட்ட அதே அவமதிப்பு சில நாள்களுக்கு முன்பு ஒரு "நபரின் நடத்தையிலும்" வெளிப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் அதை ஒரு "தற்செயலான நிகழ்வு" என்று கூறி நிராகரித்தது.

இன்று, அதே அவமதிப்பு காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகவே மாறிவிட்டது. "இது வெறும் அரசியல் ரீதியான வாதம் மட்டுமல்ல; வாக்கு வங்கி எனும் பலிபீடத்தில் நாட்டின் சுயமரியாதையை காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அடகு வைப்பதற்கான சான்றாகும்," என்று நிதின் நபின் கூறியுள்ளார்.

Summary

BJP president Nitin Nabin on Thursday slammed the Congress over its decision to sing only two stanzas of Vande Mataram at their events

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.