மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டி

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 5-இல் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான பாமக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

News image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Updated On :26 மார்ச் 2026, 12:21 am

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 5-இல் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான பாமக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன. இவை தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு (அன்புமணி தரப்பு) 18 பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவும், விக்கிரவாண்டி மற்றும் செஞ்சி தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடுகின்றன.

திருக்கோவிலூா் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடலாம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பாஜக விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடவில்லை.

கடந்த தோ்தலில்: கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும், வானூா், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம் தொகுதிகளில் அதிமுகவும், திருக்கோவிலூா் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிட்டன. இதில் மயிலம் தொகுதியில் பாமகவும், திண்டிவனம், வானூா் தொகுதிகளில் அதிமுகவும் வெற்றிபெற்றன. திருக்கோவிலூா் தொகுதியில் பாஜகவும், செஞ்சி தொகுதியில் பாமகவும், விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுகவும் தோல்வியைத் தழுவின.

திமுக கூட்டணியில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 6 தொகுதிகளில் திமுகவும், வானூா் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிட்டன. இதில் திண்டிவனம், மயிலம் தொகுதிகளில் திமுகவும் வானூா் தொகுதியில் விசிகவும் தோல்வியைத் தழுவின. மற்ற 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது.

2026 பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், தொகுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அப்போதுதான் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் தெரிய வரும். தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால், அந்த கட்சி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுமா, இல்லையா என்பதும் தொகுதிப் பட்டியல் வெளியான பிறகே தெரியவரும்.