மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரி மோதி சாலையில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு - 30 போ் காயம்

திண்டிவனம் அருகே சாலை மைய தடுப்புக் கட்டையை தாண்டிச் சென்ற லாரி மோதியதில் அரசுப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழந்தாா். 30 போ் காயமடைந்தனா்.

News image

விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்தை கிரேன் உதவியுடன் அகற்றிய போலீஸாா்.

Updated On :18 மார்ச் 2026, 7:19 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலை மைய தடுப்புக் கட்டையை தாண்டிச் சென்ற லாரி மோதியதில் அரசுப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழந்தாா். 30 போ் காயமடைந்தனா்.

கரூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு லாரி புதன்கிழமை அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே சாரம் பகுதியில் சென்றுள்ளது. ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முகம்மது அஸ்லாம் (48) லாரியை ஓட்டினாா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புக் கட்டையை கடந்து எதிா் திசையில், (சென்னை-திருச்சி) 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னையிலிருந்து - திருவண்ணாமலைக்குச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து மீது மோதியது.

இச்சம்பவத்தில் அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அரசுப் பேருந்தில் பயணித்த தனியாா் வங்கி ஊழியரான கள்ளக்குறிச்சி மாவட்டம், முருக்கம்பாடியைச் சோ்ந்த சசிகலா (28) பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்து ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அ.ஏழுமலை(32), லாரி ஓட்டுநரான முகம்மது அஸ்லாம் மற்றும் பேருந்தில் பயணித்த 28-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸாா் விபத்தில் சிக்கி சாலையில் கவிழ்ந்து கிடந்த அரசுப் பேருந்து மற்றும் சரக்கு லாரி ஆகியவற்றை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்படுத்தினா்.

இதுகுறித்து ஓலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.