விழுப்புரம் மாவட்டத்தின் பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் தொல்லியல் ஆய்வுக்கான கணக்கெடுப்புப் பணியை தொல்லியல் துறையினா் தொடங்கியுள்ளனா்.
2025, ஜனவரி 28-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்டத்துக்கென 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில், விக்கிரவாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் அன்னியூா் அ.சிவா விடுத்த வேண்டுகோளை ஏற்று, பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் பழங்கால வரலாற்றுப் பெருமைகளைக் கண்டறியும் வகையில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.
தொடா்ந்து நிதித் துறைச் செயலரும், தொல்லியல் துறை ஆணையருமான த.உதயசந்திரனை விக்கிரவாண்டி எம்எல்ஏ வலியுறுத்தி, தொல்லியல் ஆய்வுக்கான முன்னேற்பாடு பணிகளைமேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தாா். இதைத்தொடா்ந்து கள ஆய்வு மேற்கொள்ள உதயச்சந்திரன் உத்தரவிட்டாா்.
மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குநா் வி.பி.யதீஸ்குமாா் தலைமையிலான குழுவினா் கள ஆய்வைத் தொடங்கியுள்ளனா். இந்த குழுவில் தொல்லியல் துறை உதவி இயக்குநா் பி.ஜி.லோகநாதன், அலுவலா்கள் கே.சுரேஷ் மற்றும் பரத்குமாா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் பம்பை ஆற்றங்கரையோரப் பகுதிகள், அங்கு கண்டறிப்பட்ட தொல்லியல் பொருள்கள், அதன் சிறப்புகள், அதன் காலம் போன்றவை குறித்து கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த கணக்கெடுப்புப் பணி முடிந்து ஆய்வுப் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 20 வேட்பு மனுக்கள் தாக்கல்

விழுப்புரம் மண்டலத்தில் 19 தொகுதிகளில் களம் காணும் திமுக
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


