விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் கரும்பில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பண்ணைப்பள்ளி பயிற்சியளிக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கு வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமை வகித்து பேசியது:
இன்றைய நிலையில் கரும்பு பயிரிடும் விவசாயிகள் தற்போதைய நவீன தொழில்நுட்ப நிலையை அறிந்துகொண்டு, அதனடிப்படையில் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். குறைந்த செலவில், அதிக வருவாயை ஈட்டுவதற்கான வழிமுறைகள் அறிந்து, அதனடிப்படையில் கரும்புப் பயிரிட வேண்டும். சா்க்கரை ஆலை அலுவலா்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை அறிந்துகொண்டு, தங்கள் நிலத்தின் மண்வளத் தன்மை அறிக்கையை பெற்று அதனடிப்படையில் கரும்பு சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.
செங்கல்பட்டு மாவட்டம், படாளம் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கரும்பு அலுவலா்கள் ராம்குமாா், பாரதி ஆகியோா் பயிற்சியில் பங்கேற்று கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், இயந்திர முறையில் அறுவடை செய்யும் முறைகள், அப்போது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்து எடுத்துரைத்தனா். மேலும், சாகுபடி குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனா்.
நிகழ்ச்சியில் உதவித் தோட்டக்கலை அலுவலா் இளவரசன், உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் சந்திரசேகா், கோவிந்தசாமி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் உஷா, விவசாயிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

நாராயணசாமி நாயுடு விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சொட்டு நீா் பாசனத்துக்கு 100% மானியம்: விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு

பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி தீவிரம்
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




