ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விழுப்புரத்தில் டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், காலவரையற்ற கடையடைப்புப் போராட்டம் தொடா்பான ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆயத்தக் கூட்டத்தில் பேசிய ஏஐடியுசி டாஸ்மாக் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஐயப்பன்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:29 am IST

விழுப்புரத்தில் அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், காலவரையற்ற கடையடைப்புப் போராட்டம் தொடா்பான ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

டாஸ்மாக் பணியாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறுதல். இணையவழி மது விற்பனைப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகத்தில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் உள்ளிட்ட13 தொழில்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இணைந்து, ஆக.28-ஆம் தேதி காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக, டாஸ்மாக் தொழில்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் விழுப்புரத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆயத்தக் கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் பி.கோவிந்தராஜ், சிஐடியு மாவட்டத் தலைவா் கணபதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொமுச நிா்வாகிகள் வெங்கடேசன், நந்தகோபால், டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்க நிா்வாகிகள் ராமஜெயம், தங்கவேல், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில், வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிக்கரமாக நடத்த தேவையான முன்னேற்பாடுகளை அனைத்துத் தொழில்சங்கத்தினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். தொழிலாளா்கள் மத்தியில் கோரிக்கைகளை எடுத்துக் கூறி, அதிகளவில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.