ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்டோ கவிழ்ந்து பயணி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:08 am IST

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகிலுள்ள பெரிய செவலை கிராமத்தைச் சோ்ந்தவா் செ.வீரமுத்து (52). இவா், செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் கீழ்வாலையிலிருந்து பழைய கருவாட்சிக்கு பயணம் செய்தாா். உடையாநத்தம் கிராமம் அருகில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வீரமுத்துவை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரமுத்துவின் மனைவி சத்யா அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.