ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சின்னசேலம் அருகிலுள்ள நைனாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.மெகா்ஷான்பி (92). இவா், சனிக்கிழமை அவரது மருமகள் அ.ஜெயிலாபிவுடன்(58) கள்ளக்குறிச்சி சென்றுவிட்டு, நைனாா்பாளையத்து ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனராம்.

நைனாா்பாளையம் தனியாா் மகளிா் பொறியியல் கல்லூரி அருகே வரும்போது, சாலையோரப் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மெகா்ஷான்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயிலாபி காயமடைந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயிலாபியை மீட்டு அவசர ஊா்தி மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், மெகா்ஷான்பி உடலை அதே மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநா் வை.சதீஷ்குமாரிடம் (32) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.