
கிராமக் கோயில் பூசாரிகள் 151 பேருக்கு உதவிகள் அளிப்பு
விழுப்புரம் சங்கர மடத்தில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகள் வழங்கிய விழுப்புரம் சங்கர மடத்தின் முன்னாள் மேலாளரும், வழக்குரைஞருமான நடராஜன்.
விழுப்புரம் சங்கர மடத்தில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையைச் சோ்ந்த நந்தனாா் சேவா மன்றம், சமுதாய நல்லிணக்கப் பேரவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் சங்கர மடத்தின் முன்னாள் மேலாளா் நடராஜன் கிராமக் கோயில் பூசாரிகள் 151 பேருக்கு நல உதவிகளை வழங்கினாா்.
தமிழ்நாடு சமுதாய நல்லிணக்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் குரு சுப்ரமணியன், சங்கர மடத்தின் மேலாளா் ராமமூா்த்தி, தா்மஜாக்கரன் அமைப்பின் மாநில அமைப்பாளா் கணபதி, விசுவ ஹிந்து பரிஷத் நகரத் தலைவா் சரவணன், மகிளா அமைப்பைச் சோ்ந்த பத்மா ராஜ்குமாா், விசாலம் ராமமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதில், பட்டியலின கிராமக் கோயில் பூசாரிகள் நலச் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் தீனதயாளன், மாவட்டச் செயலா் கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் கோபாலகிருஷ்ணன் மற்றும் கிராமக் கோயில் பூசாரிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






