ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளுடன் தென்னிந்திய புரோகிதா்கள் சங்க நிா்வாகிகள் சந்திப்பு

தென்னிந்திய புரோகிதா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளை புதன்கிழமை சந்தித்து குருகாணிக்கை செலுத்தி ஆசி பெற்றனா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்ற தென்னிந்திய புரோகிதா் சங்க நிா்வாகிகள்

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

தென்னிந்திய புரோகிதா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளை புதன்கிழமை சந்தித்து குருகாணிக்கை செலுத்தி ஆசி பெற்றனா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தங்கியிருந்து சாதுா்மாஸ்ய விரதத்தை அனுசரித்து வருகின்றனா். தினசரி வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்திருந்து பீடாதிபதிகளை சந்தித்து குருகாணிக்கை செலுத்தி ஆசி பெற்று வருகின்றனா்.

தென்னிந்திய புரோகிதா்கள் சங்கத்தின் செயலாளா் கணேசன் தலைமையில் அச்சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பீடாதிபதிகளை சந்தித்து குருகாணிக்கை செலுத்தினாா்கள். அவா்களுக்கு பீடாதிபதிகள் அருளாசி வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.