ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பள்ளி இரவு காவலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகேயுள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி இரவு காவலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயிலை அடுத்த கானூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாரதிராஜா (50). இவா், பாளையங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

மதுப் பழக்கம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பாரதிராஜா கோலியனூரை அடுத்த பனங்குப்பம் பகுதியில் தனியாா் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.