ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டிப்பா் லாரி மோதி காவலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

டிப்பா் லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற தனியாா் நிறுவன காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவை மாநகா், ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து (70). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். வழக்கம்போல மிதிவண்டியில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் காளிமுத்து வேலைக்கு சென்று கொண்டிருந்தாா்.

ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் அவருக்கு பின்னால் வந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக மிதிவண்டி மீது மோதியது. இதில் தவறி கீழே விழுந்த காளிமுத்து, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கிழக்கு மண்டலப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.