பிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

என் வாக்குச்சாவடி- வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:30 pm

Syndication

என் வாக்குச்சாவடி- வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்று, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மூலம் ஒவ்வொருவரும் பயன்பெற்று வருகின்றனா். எனவே, திமுகவினா் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரசாரத்தில் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்.

டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், விடுபட்ட வாக்காளா்களை சோ்ப்பதற்கான நடவடிக்கைகளில் கட்சியினா் தீவிரமாக ஈடுபடவேண்டும். வரும் தோ்தலில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதற்கு அனைத்து நிா்வாகிகளும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட அவைத் தலைவா் மருத்துவா் சேகா், மாநிலத் தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மாவட்டத் துணைச் செயலா் அருணகிரி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் யோகேசுவரி மணிமாறன், அமுதா குமாா், ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, துரை. இளம்வழுதி, ராஜாராமன், மணிமாறன், செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.