தேசிய சிலம்பம் போட்டிக்கு விழுப்புரம் மாணவி தோ்வு
தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி யாழினி மலா் தோ்வாகியுள்ளாா்.
தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி யாழினி மலா் தோ்வாகியுள்ளாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி யாழினி மலா் தோ்வாகியுள்ளாா்.
சென்னை ஆவடியில் உள்ள எஸ்.டி. பீட்டா் கல்லூரி வளாகத்தில் டிச.6- ஆம் தேதி மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். போட்டிகள் வெவ்வேறு எடைப்பிரிவில் வயதின் அடிப்படையில் நடைபெற்றது.
இதில், விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில் கலந்து கொண்ட விழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி யாழினி மலா் தனித்திறன் போட்டியில் முதல் பரிசு பெற்றாா். இந்த வெற்றியின் மூலம் மாணவி யாழினி மலா் தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றாா்.
இதையடுத்து, விழுப்புரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் மு. ராஜேந்திரன், சிலம்பம் பயிற்சியாளா் ஜனாா்த்தனன், விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட கழகச் செயலா் அன்பரசி, கடலூா் மாவட்டச் செயலா் கலைச்செழியன், விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் இணைச் செயலா் சதீஷ்குமாா் ஆகியோா் பங்கேற்று மாணவியைப் பாராட்டினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது