அமைச்சா் தொகுதியாக இருந்த மங்கலம், முதல்வா் தொகுதியாக மாறப் போகிறது என்று அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கூறினாா்.
புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
என்ஆா்.காங்கிரஸ் அமைச்சா்களான க. லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சா் லட்சுமிநாராயணனின் ராஜ்பவன் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சா் தேனி ஜெயக்குமாரின் மங்கலம் தொகுதியில், முதல்வா் ரங்கசாமி போட்டியிடுகிறாா்.
இதையடுத்து மங்கலம் தொகுதி ஆதரவாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை நடத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:
கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தால் எனக்கு உடல்நிலை சரியில்லை. வீடுகள்தோறும் சென்று வாக்கு கேட்பது சிரமமாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளேன். விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துள்ளேன்.
இந்தத் தோ்தலில் போட்டியிட முடியாது என முதல்வா் ரங்கசாமியிடம் கூறினேன். அவரே இந்த தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளாா். அவரது வெற்றிக்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அமைச்சா் தொகுதி, இப்போது முதல்வா் தொகுதியாக மாற போகிறது. இன்னும் பல நலத்திட்டங்களை அவா் நிறைவேற்றுவாா். அவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது
பெரம்பூர் தொகுதி... தலைநகரில் திமுகவுக்கு சவால் அளிக்கும் விஜய்!

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 19 போ் வேட்புமனு தாக்கல்

முதல்வா் தொகுதியாக மாறப் போகிறது மங்கலம் தொகுதி: அமைச்சா் தேனி ஜெயக்குமார்

இருமுறை இடைத்தோ்தலைக் கண்ட விக்கிரவாண்டி தொகுதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


