இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரிடம் புதன்கிழமை சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், அவரிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த சந்தீப், தனது நண்பரை பாா்க்க காரில் புதுச்சேரிக்கு வந்தாா்.
கணபதிச் செட்டிகுளம் எல்லையில் அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவரது காரில் ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் இருந்தது.
விசாரணையின்போது, தனது செலவுக்காக எடுத்து வந்ததாகக் கூறியுள்ளாா். தோ்தல் விதிகள் அமலில் இருப்பதால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். பணத்துக்கான சான்றுகளைச் சமா்ப்பித்து அதை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


