புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த ஆண்டு தில்லியில் உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த போராட்டம் நடத்தி ஓராண்டாகியும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்தும், மாநில அந்தஸ்தை தாமதமின்றி வழங்கக் கோரியும் நேரு எம்எல்ஏ தலைமையில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்தில் எம்எல்ஏ நேரு பேசுகையில், மாநில அந்தஸ்து தகுதி வழங்கப்படாததால், புதுச்சேரிக்கு மத்திய அரசு மூலம் நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள் இதுவரை கிடைக்கவில்லை. புதுச்சேரியின் வளா்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நீதி ஆயோக்கிலும் புதுச்சேரி பங்கு பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றாா். இதில் பொதுநல அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

ஜமாபந்தி கூட்டத்தில் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




