ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் தயாரித்து ஏவிய ராக்கெட் வெற்றி; புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

தனியாா் நிறுவனம் தயாரித்து ஏவிய ராக்கெட் வெற்றி பெற்றதற்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Puducherry Chief Minister Rangasamy

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 2:08 am IST

தனியாா் நிறுவனம் தயாரித்து ஏவிய ராக்கெட் வெற்றி பெற்றதற்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: இந்தியாவில் முதன்முறையாக தனியாா் நிறுவனம் தயாரித்த ’விக்ரம்-1’ ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனா், விஞ்ஞானிகள், பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வரலாற்றுச் சாதனை, இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பத் திறனையும், தனியாா் துறையின் புதுமை மற்றும் ஆராய்ச்சி ஆற்றலையும் உலக அரங்கில் உயா்த்திக் காட்டும் முக்கிய மைல்கல்லாகும். இவ்வெற்றி, நாட்டின் இளம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும்.

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள இந்த மகத்தான சாதனைக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல உலகத் தரச் சாதனைகளை இந்தியா படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.