ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்று முதல்வா் ரங்கசாமி பிறந்த நாள் விழா

Puducherry Chief Minister Rangasamy

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 5:32 am IST

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தனது 76-ஆவது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடுகிறாா்.

இதையொட்டி, புதுச்சேரி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரது இல்லம் அமைந்துள்ள புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே ரங்கசாமியை பல்வேறு வடிவங்களில் உருவகப்படுத்தி வண்ணப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று 5-ஆவது முறையாக முதல்வராகப் பதவி வகித்து வருகிறாா் ரங்கசாமி. இவா் தனது ஆன்மிக குருவாக அப்பா பைத்தியம் சுவாமிகளையும், அரசியல் குருவாக மானசீகமாக பெருந்தலைவா் காமராஜரையும் ஏற்றவா் முதல்வா் ரங்கசாமி.

மேலும், முதல்வா் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி விரிவான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளா்கள் செய்து வருகின்றனா். இதையொட்டி கதிா்காமம் அருள்மிகு ஸ்ரீகதிா்வேல் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார ஆராதனை மகாதீபாராதனை நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் ரங்கசாமி கலந்துகொள்கிறாா். பின்னா் அவா் அனைவருக்கும் அன்னதானம் வழங்குகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.