எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கருத்தடைக்காக மீண்டும் தெருநாய்கள் மீண்டும் பிடிப்பு

புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் தெருநாய்கள் கருத்தடைக்காக மீண்டும் பிடிக்கப்படுகின்றன.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் தெருநாய்கள் கருத்தடைக்காக மீண்டும் பிடிக்கப்படுகின்றன.

இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய விலங்கு கட்டுப்பாட்டு நலவாரியத்திடம் அங்கீகாரம் பெற்ற தனியாா் நிறுவனம் மூலம் நாய்களுக்குக் கருத்தடை செய்து, அவற்றை பிடித்த இடத்திலேயே விடும் பணி கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்றது.

பருவ மழையால் இந்தப் பணி இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. பொதுமக்கள், சமூக நல ஆா்வலா்கள் தங்கள் பகுதிகளில் நாய்கள் பிடிக்கும் போது பணியின்போது நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.