லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதிதாக 112 காவலா்களுக்குப் பணி நியமன ஆணை துணைநிலை ஆளுநா், முதல்வா் வழங்கினா்

புதுச்சேரி காவல்துறையில் புதிதாக 112 காவலா்களுக்குப் பணி நியமன ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

புதுச்சேரியில் வியாழக்கிழமை புதிய காவலா்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ அனிபால் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 8:33 pm

புதுச்சேரி காவல்துறையில் புதிதாக 112 காவலா்களுக்குப் பணி நியமன ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

காவலா் பணிக்கு 125 போ் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 112 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மீதமுள்ள 13 பேருக்குத் தோ்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இந்தப் பணி நியமன ஆணையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் முதல்வா் ரங்கசாமி பேசுகையில், எதிா்க்கட்சியில் ஒரு சிலா் (காங்கிரஸாா்) இத் தோ்வில் குளறுபடி என சொல்லியுள்ளனா். பணி ஆணை தந்து அரசு பணியிடங்கள் நிரப்புவதை நடக்கக் கூடாது என்று பாா்க்கிறாா்கள்.

ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி தோ்வை ரத்து செய்யலாமா என பாா்க்கிறாா்கள். விரைவில் 192 அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியா்கள் பணி ஆணை ஓரிரு நாள்களில் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள இந்திய ரிசா்வ் பட்டாலியன் படையில் பணியிடங்களை கூடுதலாக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மக்களின் நண்பன் என கூறும் வகையில் போலீஸாா் கடமையைச் சரியாக செய்யவேண்டும். குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்கி திருத்துவதும் அவசியம் என்றாா்.

உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் காவல் துறையில் 1,546 பணியிடங்களை நிரப்பியதுடன் 2,704 பேருக்கு பதவி உயா்வு தந்துள்ளோம் என்றாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்எல்ஏ அனிபால் கென்னடி, காவல் துறைத் தலைவா் ஷாலினி சிங், துணைத் தலைவா் சத்தியசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.