டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொம்பாக்கம் பகுதியில் ரூ.88 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

News image
கொம்பாக்கம் பகுதியில் ரூ. 88.13 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த ஆா். சிவா எம்எல்ஏ.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி வில்லியனூா் தொகுதி கொம்பாக்கம் பகுதியில் ரூ. 88.13 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஆா். சிவா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதன்படி, செந்தூா் முருகன் நகரில் ரூ.34.66 லட்சம் செலவில் பக்க வாய்க்காலுடன் கூடிய தாா்ச்சாலை அமைக்கும் பணி, பாப்பாஞ்சாவடி சப்தகிரி நகரில் அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் ரூ. 26.37 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி, கொம்பாக்கம் பிரியங்கா அவென்யு நகரில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் ரூ. 27.10 லட்சம் செலவில் புதிய சாலை அமைத்தல் என மொத்தம் ரூ. 88.13 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன.

பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்ட செயற்பொறியாளா் சீனுவாசன், இளநிலைப் பொறியாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.