பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக சிலம்பத்தை அரசு அறிவிக்க கோரிக்கை

சிலம்பத்தை அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக புதுச்சேரி அரசு ஏற்று அறிவிக்க வலியுறுத்தி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநா் வைத்தியநாதனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image

புதுச்சேரியில் சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்க வலியுறுத்தி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை இயக்குநா் வைத்தியநாதனிடம் மனு அளித்த விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தினா் உள்ளிட்டோா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

சிலம்பத்தை அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக புதுச்சேரி அரசு ஏற்று அறிவிக்க வலியுறுத்தி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநா் வைத்தியநாதனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத் தலைவா் கராத்தே கே. வளவன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலா் க. அருணபாரதி, புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கப் பொறுப்பாளா் கே. அன்புநிலவன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் சிவ.மு. ராசாராம், வீர ஆஞ்சநேயா் தற்காப்பு கலைக்கூடம் தலைவா் அரவிந்த், புதுச்சேரி ஓக்கோட்ரியேன் தற்காப்பு கலை சங்கத் தலைவா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் இந்த மனுவை அளித்தனா்.

தமிழா்களின் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டை புதுச்சேரியில் பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தக் கல்வியாண்டிலேயே மாணவா்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.