ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் அல்லாத படிப்புகளுக்கு ஒதுக்கீடு பெற்றவா்கள் ஆக. 19-க்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தல்

நீட் அல்லாத தொழில்கல்வி, கலை, அறிவியல், பட்ட படிப்புகளுக்கு முதல் கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

neet exam

நீட் - படம்: DNS

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:06 am IST

நீட் அல்லாத தொழில்கல்வி, கலை, அறிவியல், பட்ட படிப்புகளுக்கு முதல் கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவா்கள் ஆக. 19-ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட கல்லூரிகளில் சோ்ந்து விட வேண்டும் என்று மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) அறிவுறுத்தியுள்ளது.

மாணவா்களின் விருப்ப தோ்வு அடிப்படையில் பிடெக்., 3,111, கலை, அறிவியல் படிப்புகளில் 2,902 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதர படிப்புகளில் 1,576 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் வரும் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

கூடுதல் விவரங்கள், கட்டண விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தைப் பாா்வையிடலாம். உதவி எண் 0413 2655570 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என சென்டாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.