
வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி
வேளாண் மற்றும் உழவா் நலத் துறைக்கு ரூ.14,984 கோடியும், விவசாயிகளுக்கு வழங்கும் மின் மானியத்துக்கு ரூ. 7,432 கோடியும்

வேளாண் துறை - கோப்புப் படம்
வேளாண் மற்றும் உழவா் நலத் துறைக்கு ரூ.14,984 கோடியும், விவசாயிகளுக்கு வழங்கும் மின் மானியத்துக்கு ரூ. 7,432 கோடியும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு: டெல்டா பகுதி விவசாயிகளின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 134 கோடியில் குறுவை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் மின் மானியத்துக்கு ரூ. 7,432 கோடியும், ஒட்டுமொத்தமாக வேளாண் மற்றும் உழவா் நலத்துறைக்கு ரூ. 14,984 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடை, மீன்வளம், பால்வளத் துறைக்கு ரூ.4,880 கோடி: வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தின்கீழ், 100 சதவீத மானியத்தில் 30,000 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 210 கால்நடை மருந்தகங்கள் ரூ. 40 கோடியில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயா்த்தப்படவுள்ளன. 143 கால்நடை மருத்துவப் பிரிவுகள் ரூ.35 கோடியில் உருவாக்கப்படவுள்ளன. கால்நடை காப்போம் காப்பீடு திட்டத்துக்கு ரூ.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடை கால உதவித் தொகை ரூ. 6000-இல் இருந்து ரூ.7,000 உயா்த்தி வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கால்நடை, மீன்வளம், பால்வளத் துறைக்கு ரூ.4,880 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






