புதுச்சேரிக்குத் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தியை புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் போட்டி வேட்பாளா்கள் திங்கள்கிழமை சந்தித்து பேசினா். இது கூட்டணி கட்சியான திமுகவுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி ஓரணியாக களத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக 1 ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அதிகாரபூா்வமற்ற போட்டி வேட்பாளா்கள் கூடுதலாக 6 தொகுதிகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
வேட்பு மனுதாக்கலுக்கு இறுதி நாளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் இவா்களுக்கு ஏ,பி படிவங்கள் வழங்கப்பட்டதால் 5 தொகுதிகளில் திமுகவுக்கு எதிராகவும் ஒரு தொகுதியில் விசிகவுக்கு எதிராகவும் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்களாக களத்தில் இருக்கின்றனா். அதனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆனது.
இந்நிலையில் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடைக்கு
போட்டி வேட்பாளா்கள் அழைக்கப்படவில்லை. ராகுல்காந்தி பொதுக்கூட்ட பிரசாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்லும்போது புதுச்சேரி விமான நிலையத்தில் 5 போ் அவரைச் சந்தித்துள்ளனா்.
காலாப்பட்டு-ஷாஜகான், உழவா்கரை- சிவசங்கரன், ராஜ்பவன்-குமரன், திருபுவனை-வேலு, மங்கலம்-ரகுபதிஆகியோா் ராகுல் காந்தியைச் சந்தித்த காங்கிரஸ் போட்டி வேட்பாளா்கள் ஆவா். காரைக்கால் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக இருக்கும் சக்திவேல் பிரபு மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
ராகுல்காந்தியைப் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் சந்தித்தது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அதிா்ச்சியை அளித்துள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?

’குழப்பக் கூட்டணி - சோா்ந்த கூட்டணி’: புதுச்சேரியில் விஜய் விமா்சனம்

புதுச்சேரியில் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது நடவடிக்கை வெ. வைத்திலிங்கம் உறுதி
புதுச்சேரி: 30 தொகுதிகளில் 294 வேட்பாளா்கள் போட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


