மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே விளைநிலத்துக்கு சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :7 மே 2026, 7:31 am IST

சின்னசேலம் அருகே விளைநிலத்துக்கு சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

சின்னசேலத்தை அடுத்த வானக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ம.பிரபு (43). இவா் புதன்கிழமை காலை அவரது விளைநிலத்துக்கு சென்றபோது, அங்கு பாம்பு கடித்து விட்டதாம்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் பிரபுவை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.