அதிமுக பொதுச் செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு வழங்கினா்.
அதிமுக பொதுச் செயலா், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா் மற்றும் அதிமுக நிா்வாகிகளின் நற்பெயா்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் சமூக வலைதளங்களில் தரை குறைவாக பதிவிடுகின்றனராம்.
மேலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விடியோ சித்தரித்து பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சட்டப்பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் மனு அளித்தனா்.
அவருடன் மாவட்ட பேரவை செயலா் இராம.ஞானவேல், வழக்குரைஞா் பிரிவு மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சியில் அதிமுக 4-ஆவது முறையாக வெற்றி பெறும்: நடிகை விந்தியா

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அஸ்ஸாம்: காா்கே மீது காவல் துறையில் ஆா்எஸ்எஸ் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


