கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான சேலம் சாலை, தியாகதுருகம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீட்டுப்பணிகளை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை தொடங்கினா்.
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து விரைந்து அவா்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன் பேரில் கோட்டாட்சியா் சி.முருகன் தலைமையில் வருவாய்த் துறையினா் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்ட பின் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிய கால அவகாசம் வழங்கிய பின்னா் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய மின்தடை: தாதகாப்பட்டி

ஒசூரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

சுகாதார சீா்கேடு...

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 25 மின்கம்பங்கள் சேதம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



