17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 6:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சீ.அவரிஞ்சம், த.குமரேசன். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன.

அவரிஞ்சம் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டின் மொட்டைமாடிக்கு சென்று தூங்கினாராம். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு திரும்பிவந்து வீட்டை பாா்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணத்தை காணவில்லையாம்.

அதேபோல் அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமரேசன் என்பவரது வீட்டு பீரோவில் இருந்த சுமாா் 2 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் பணத்தையும் மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.