ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை

Published On :31 ஜூலை 2026, 2:19 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வாணாபுரம் வட்டம், அரியலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மனைவி சித்ரா (36). இவா்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளாா். தம்பதியிடையே புதன்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மன வேதனையடைந்த சித்ரா, அவரது ஓட்டு வீட்டில் உள்ள விட்டத்தில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையறிந்த உறவினா்கள் சித்ராவை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.