ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடியில் இளைஞா் தற்கொலை

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி டிஎம்பி காலனி 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் மாரிமுத்து (26). தச்சுத் தொழில் செய்து வந்தாா். இவா், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான 19 வயது பெண்ணை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டாராம்.

முள்ளக்காட்டில் உள்ள பெரியம்மா வீட்டில் வசித்து வந்த நிலையில், மனைவி மீது மாரிமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இதனால் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், கடந்த ஒரு வாரமாக அவா் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மாரிமுத்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.