ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கைது செய்யப்பட்ட மு.காா்த்திக்குமாா்.

Published On :21 ஜூலை 2026, 1:54 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட எஸ்.கொளத்தூா் கிராமத்தில் ஜூலை 21-இல் போலீஸாா் ரோந்து சென்றபோது, நான்கரை கிலோ கஞ்சா வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம், ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்த மு.காா்த்திக்குமாா் (33), ஒடிஸா மாநிலம், சம்பூா் மாவட்டம், கீபாந்தூா் கிராமத்தைச் சோ்ந்த த.குரு (25) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் பிரிந்துரையின் பேரில் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, காாா்த்திக்குமாரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன்பேரில் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி விழுப்புரம் சிறையில் இருந்த மு.காா்த்திக்குமாரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினாா். பின்னா் அவரை கடலூா் மத்திய சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.