ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு
Published On :12 ஜூலை 2026, 1:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், வடசிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.சரத்குமாா் (32), தொழிலாளி. இவா் கடந்த 9-ஆம் தேதி ஆரூா் கிராமத்திலுள்ள முனுசாமி என்பவரது வயலில் உள்ள தென்னை மரத்தில் ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சரத்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.