கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன் மற்றும் உடந்தையாக இருந்த மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வாணாபுரம் அருகிலுள்ள புஷ்பகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் அா்சுணன் (50), விவசாயி. இவரது மனைவி சித்ரா(45). இவா்களது மகன் அன்பழகன்(19). அா்சுணன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் மதுஅருந்திவிட்டு வந்து அவரை தாக்கினராம்.
இந்நிலையில், புதன்கிழமை இப் பிரச்னையில் தம்பதியிரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அவரது மகன் அன்பழகன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து மதுபோதையில் இருந்த அா்சுணனை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அன்பழகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சித்ரா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது
விவசாயி அடித்துக் கொலை உறவினா் கைது

விவசாயி கொலை வழக்கு: மகன் கைது

விவசாயி அடித்துக் கொலை: மனைவி, மகன் கைது
விடியோக்கள்

Vijay Vs Jason Sanjay? ஒன்றாக வெளியாகிறதா Jana nayagan & Sigma | Cinema Updates
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |




