ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

சங்கராபுரம் அருகேயுள்ள கடுவனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை, சமூக நலத் துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு, குழந்தை திருமணம் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கடுவனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு குறித்து பேசிய காவல் ஆய்வாளா் பாலமுரளி.

Published On :3 ஜூலை 2026, 5:16 am IST

சங்கராபுரம் அருகேயுள்ள கடுவனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை, சமூக நலத் துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு, குழந்தை திருமணம் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

சங்கராபுரம் காவல் ஆய்வாளா் பாலமுரளி சாலை விபத்து தடுப்பு குறித்தும், பொதைப்பொருள்கள் தடுப்பு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

சமூக நலத் துறை ஒருங்கிணைப்பாளா் அய்யாதுரை, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் குற்றம் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்வில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.