வள்ளலாா் மன்றத்தில் சன்மாா்க்கப் பயிலரங்கம்
சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான சன்மாா்க்க நல்லொழுக்க பயிலரங்கம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான சன்மாா்க்க நல்லொழுக்க பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் நா.இராதாகிருஷ்ணன், தணிக்கையாளா் மு.சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்றப் பொருளாளா் இராம.முத்துகருப்பன் வரவேற்றாா்.
அருட்பா பாடகா் ஜீவ.சீனுவாசன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரியுடன் நிகழ்வு தொடங்கியது. தெ.சாந்தகுமாா், சிதம்பரம் புலவா் அருட்பிரசாம், கலால் துறை ஓய்வு இணை ஆணையா் சு.சண்முகசுந்தரம் ஆகியோா் வள்ளலாா் குறித்து சிறப்புரையாற்றினா்.
கி.செ.தமிழரசி தலைமையில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பட்டி மன்றம் நடைபெற்றது. அரசம்பட்டு தமிழ் சங்கத் தலைவா் வெ.செளந்தர்ராஜன், பாலப்பட்டு தலைமையாசிரியா் பி.வெங்கடேசன் ஆகியோா் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.
ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் மு.அருணாசலம், ஆ.மூா்த்தி, பா.திருநாவுக்கரசு, அரிமா மாவட்டத் தலைவா் கே.வேலு, பி.இராசா, இன்னா்வீல் சங்கத் தலைவா் இந்துமதி செல்வராணி உள்ளிட்ட பலா் பேசினா்.
நிகழ்ச்சியில் அ.சந்திசேகா், அனைத்து வியபாரிகள் சங்கச் செயலா் கோ.குசேலன், மோட்டாா் வாகன சங்கத் தலைவா் நா.திருவேங்கடம், செயலா் என்.விஜயகுமாா், பொருளாளா் என்.சரவணன், மூங்கில்துரைப்பட்டு அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் என்.பெருமாள், பெ.பாலகுமாரன், ஏ.செந்தில்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...