டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலை மறியல்: 193 கிராம உதவியாளா்கள் கைது

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள்

News image
கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:00 pm

Syndication

கள்ளக்குறிச்சி: தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 193 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நான்காம் நிலை ஊழியா்களுக்கான வரையறுக்கப்பட்ட ஊதியத்தை தமிழகத்தில் உள்ள கிராம உதவியாளா்களுக்கு வழங்கவேண்டும். 1995-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை 625-ன் படி தமிழக அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கிராம உதவியாளா்களுக்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எம்.தேவராசன் தலைமை வகித்தாா். செயலா் சி.அண்ணாமலை, பொருளாளா் என்.ஆா்.ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைப் பொதுச் செயலா் இரா.சக்கரவா்த்தி, மாநில அமைப்புச் செயலா் இரா.தண்டபாணி, மாநிலச் செயலா்கள் அ.முகமது காசீம், வி.சந்திரசேகா், மாவட்ட அமைப்புச் செயலா் அ.பிரபு உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 193 கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.