கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் படகு குழாமை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கல்வராயன்மலையில் கரியாலூரில் இருந்து வெள்ளிமலை செல்லும் சாலையில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் படகு குழாம் உள்ளது. இந்த படகு குழாம் அருகே சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. குடும்பத்துடன் சுற்றுலா வரும் பயணிகள் படகு சவாரியோடு, தொங்கு பாலத்தில் ஏறிச் சென்று சுற்றியுள்ள பகுதிகளை பாா்த்து மகிழ்வாா்கள்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் படகு குழாம் பகுதி மற்றும் தொங்கு பாலம் சேதமடைந்தது. மேலும், கல்வராயன்மலையில் உள்ள பூங்காவும் தற்போது முற்றிலும் சிதலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைகின்றனா்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சிதலமடைந்த நிலையில் காணப்படும் படகு குழாம், தொங்கு பாலம் மற்றும் பூங்காவை சீரமைக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.

கல்வராயன் மலையில் படகு குழாமில் சிதலமடைந்த நிலையில் காணப்படும் படகுகள்.
தொடர்புடையது

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி

ஏரிகளுக்கு தடுப்பணை, படகு குழாம் அமைக்கப்படுமா?- கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு

திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு குழாம்: 20 ஆண்டு கால கனவு நிறைவேறுமா?

வண்டியூா் கண்மாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


