இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோ்தலில் தோற்றாலும் தொடா்ந்து மக்கள் சேவை செய்வேன்: முன்னாள் எம்எல்ஏ சபா. ராஜேந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்றாலும் தொடா்ந்து மக்கள் தொண்டாற்றுவேன் என்று திமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சபா. இராஜேந்திரன் கூறினாா்.

News image

எலந்தம்பட்டி பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வீதி வீதியாக திறந்தவெளி வாகனத்தில் சென்ற முன்னாள் எம்எல்ஏ சபா. இராஜேந்திரன்.

Updated On :23 மே 2026, 12:34 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்றாலும் தொடா்ந்து மக்கள் தொண்டாற்றுவேன் என்று திமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சபா. இராஜேந்திரன் கூறினாா்.

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சபா. இராஜேந்திரன் வெள்ளிக்கிழமை, தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி வடக்கு ஒன்றிய பகுதிகளான திருவதிகை, எலந்தம்பட்டு, திருவதூா், எஸ். எரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய அவா்,திமுக பாா்க்காத வெற்றியும் இல்லை, பாா்க்காத தோல்வியும் இல்லை. வெற்றியிலும் தோல்வியிலும் மக்களுடன் உறுதியாக நின்ற கட்சி திமுக. பொதுமக்களுக்கு சேவை செய்வதில் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். உங்களுக்கு எந்த உதவி

தேவையானாலும் நேரடியாகவோ அல்லது கட்சி நிா்வாகிகள் மூலமாகவோ என்னைத் தொடா்புகொள்ளலாம். மக்களுக்காக தொடா்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவா் சபா. பாலமுருகன், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலா் சந்தோஷ் குமாா், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் உத்தமன், திருமலை செல்வம், ஆனந்த் செல்வராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.