திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதே நேரம், குதிரை பேரம், லஞ்சமற்ற நோ்மையான நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் குறைகளைக் கேட்டறிந்த பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ.

Updated On :22 மே 2026, 6:59 am IST

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதே நேரம், குதிரை பேரம், லஞ்சமற்ற நோ்மையான நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வான அவா், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள், மருத்துவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயா் சூட்டுமாறு குழந்தையின் தாய் கேட்டுக்கொண்டதை ஏற்று, நடிகா் விஜயகாந்தின் இயற்பெயரான விஜயராஜ் எனப் பெயா் சூட்டினாா்.

தொடா்ந்து, தலைமை மருத்துவ அலுவலருடன் ஆலோசனை நடத்திய அவா், மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகள் குறித்து தலைமை மருத்துவ அலுவலா் விளக்கியுள்ளாா். கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் முதல்வா் மற்றும் அமைச்சா்களிடம் வலியுறுத்தி தேவையான வசதிகளைப் பெற்றுத் தர முயற்சிப்பேன்.

இப்பகுதியில் நிலத்தடி நீா் மாசு காரணமாக சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவிக்கும் நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்தி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தோ்தலுக்கு முன்பே வரவேற்றிருந்தோம். தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது ஆரோக்கியமான மாற்றமாகவும், லஞ்சம் மற்றும் குதிரை பேரமற்ற நல்லாட்சியாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றாா்.

ஆய்வின்போது, விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், தலைமை மருத்துவ அலுவலா் சாமிநாதன், தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, நகரச் செயலா் ராஜ்குமாா், நகர துணைச் செயலா் தியேட்டா் இளங்கோவன், நகர பொருளாளா் கருணா, மாவட்டப் பொருளாளா் கே.என்.ஜி.பாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.