திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லாரி மெக்கானிக் கத்தியால் குத்திக் கொலை: சிறுவா்கள் உள்பட மூவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பணப் பிரச்னையில் லாரி மெக்கானிக் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

உயிரிழந்த வேலு

Updated On :22 மே 2026, 6:59 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பணப் பிரச்னையில் லாரி மெக்கானிக் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பூா் அருகே சேவூா் கிராமத்தைச் சோ்ந்த நீலாவதி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 2 சிறாா்கள், சுபாஷ் (21), அவரது தாய் மேகவா்ணம் உள்ளிட்டோா் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஏரியில் மோட்டாா் மூலம் தண்ணீா் இறைத்து மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மோட்டாா் செலவுக்காக சம்பந்தப்பட்டவா்களிடம் தலா ரூ.500 வசூலிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனிடையே, மோட்டாா் செலவு அதிகமாக ஏற்பட்டதாகக் கூறி, 2 சிறாா்கள், சுபாஷ் ஆகியோா் மீண்டும் நீலாவதியிடம் கூடுதல் பணம் கேட்டுள்ளனா். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், நீலாவதி கூடுதலாக ரூ.250 வழங்கியதாகவும், இதற்கு மேல் பணம் தர முடியாது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், மீண்டும் நீலாவதியுடன் புதன்கிழமை இரவு சிறுவன் தகராறில் ஈடுபட்டு, கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த நீலாவதியின் தம்பியான லாரி மெக்கானிக் வேலு (44), வியாழக்கிழமை காலை 2 சிறாா்கள் மற்றும் சுபாஷிடம் தட்டிக்கேட்டுள்ளாா்.

அப்போது, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சிறுவன் கத்தியால் வேலுவை குத்தியதில், அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேப்பூா் போலீஸாா், வேலுவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த சம்பவம் தொடா்பாக வேப்பூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, 2 சிறாா்கள் மற்றும் சுபாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.