முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் சடலத்தை உடல்கூறாய்வு செய்யாமல் ஒப்படைக்கக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 மே 2026, 2:44 am IST

கடலூா் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் சடலத்தை உடல்கூறாய்வு செய்யாமல் ஒப்படைக்கக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த பாலாஜி மகள் அக்சயா (12). இவா், உடல்நலக் குறைவால் முதலில் நெல்லிக்குப்பம் மற்றும் பின்னா் கடலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

ஆனால், அவரது உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அக்சயாவை கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அக்சயா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து, அவரது சடலத்தை உடல்கூறாய்வு செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்குமாறு பெற்றோா் கேட்டுக்கொண்டனா். ஆனால், மருத்துவா்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனா். இதற்கிடையில், உடல்கூறாய்வுக்காக அக்சயாவின் சடலத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவா்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள், கடலூா் அரசு மருத்துவமனையிலேயே உடல்கூறாய்வு செய்து, சடலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுநகா் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பின்னா், சிறுமியின் சடலம் உடல்கூறாய்வு செய்யாமல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.